சீனாவில் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு பயனீட்டாளர்களின் எண்ணிக்கை ஜூன் மாத நிலவரப்படி 700 மில்லியனை கடந்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் இது 602 மில்லியனாக இருந்தது. கேள்வி-பதில், படைப்பாக்கம், அலுவலக உதவி என பல்வேறு தேவைகளுக்கு ஏஐ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் 10,740 நிறுவனங்கள் ஏஐ பெரிய மாதிரிகள், கருவிகள், இயந்திர மனிதர்களை உருவாக்குகின்றன.
சீனாவில் ஏஐ பயனீட்டாளர்கள் 700 மில்லியனை கடந்தனர்
Source: Tamil Murasu