பாணந்துறையில் கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு

பாணந்துறையில் கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு

கொழும்பு புறநகர்ப் பகுதியான பாணந்துறை வலான, மகாநாம வீதியில் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டு கடத்தப்பட்ட நிலையில், மினுவன்பிட்டிய மயானத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்து மீட்கப்பட்டுள்ளார். காயமடைந்த அவரும் அவரது மனைவியும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பணத் தகராறே கடத்தலுக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

Source: IBC Tamil

More in Crime

Read the live feed on ZapIndies