தொடர்ந்து 2 ஆண்டுகள் பணப் பரிவர்த்தனை இல்லாத சேமிப்புக் கணக்குகள் 'செயலிழந்த கணக்கு' என வகைப்படுத்தப்பட்டாலும், அதில் உள்ள பணம் பாதுகாப்பாக இருக்கும்; வட்டியும் தொடர்ந்து வரவு வைக்கப்படும். வீட்டுக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை; எந்தக் கிளையிலும் KYC ஆவணங்களைச் சமர்ப்பித்து, 3 வேலை நாட்களுக்குள் கணக்கை மீண்டும் செயல்படுத்தலாம். வீடியோ KYC மூலமும் மீட்டெடுக்கலாம்; இதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என RBI உத்தரவிட்டுள்ளது.
2 ஆண்டுகள் பயன்படுத்தாத வங்கிக் கணக்கை மீட்டெடுப்பது எப்படி?
Source: Asianet News Tamil