அமெரிக்கத் திட்டங்களில் தென்கொரியா கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஏற்பாட்டை அதிபர் டிரம்ப் அறிவித்தார். எட்டு அணுசக்தி ஆலைகள், டெக்சஸில் மின்சார ஆலை, அலாஸ்கா இயற்கை எரிவாயுக் குழாய்த் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். ஆனால் அலாஸ்கா திட்டம் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று சோல் தெரிவித்தது; சில வர்த்தக, சட்ட நிபந்தனைகள் பூர்த்தியானால் மட்டுமே அது நிறைவேறும் என தென்கொரியா கூறியுள்ளது.
அமெரிக்காவில் தென்கொரியா 200 பில்லியன் டாலர் முதலீடு: டிரம்ப் அறிவிப்பு
Source: Tamil Murasu