மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 65 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத AICPI-IW குறியீடு 153.2-ல் இருந்து 154.4 ஆக உயர்ந்ததால், 12 மாத சராசரி 149.82 ஆக அதிகரித்தது. அரசின் ஃபார்முலாவின்படி அகவிலைப்படி 65.05 சதவீதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது; முழு எண்ணாகக் கணக்கிடப்படுவதால் இது 65 சதவீதமாகக் குறையலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 65% ஆக உயர்வு?
Source: Samayam Tamil