தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோவில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே சலுகை இப்போது கோவில் பெண் ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இந்த விடுப்பு காலத்தில் முழு சம்பளமும் வழங்கப்படும். இது அவர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கையாகும்.
திருக்கோவில் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்வு
Source: Kalki Online