செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தொழில்நுட்பக் கைவினைத் திறன் தேவைப்படும் பணிகள் உடனடியாக AI-யால் மாற்றப்படாது என்று ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் பார்லி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ஃபோர்டு ப்ரோ அக்சிலரேட் நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழிற்சாலை பணியாளர்கள், வாகன மெக்கானிக்குகள், பராமரிப்பு நிபுணர்கள் போன்றோரின் தேவை தொடரும் என்றார். மாறாக, அட்டவணைத் தரவு பணிகள், கால் சென்டர் மற்றும் ஆரம்ப நிலை நிரலாக்கப் பணிகள் AI-யால் அதிகம் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
AI வளர்ச்சியிலும் கைவினைத் தொழில்களுக்கு ஆபத்து குறைவு: ஃபோர்டு தலைமை செயல் அதிகாரி
Source: malaimurasu.com