மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,476 மியன்மார் குடிமக்களை ஏற்றிக்கொண்ட மூன்று மியன்மார் கடற்படைக் கப்பல்கள் அக்டோபர் 1ஆம் தேதி மியன்மார் கடற்பரப்பை அடைந்தன; இன்னும் சில நாள்களில் யங்கூனை அவர்கள் சென்றடைவர். உள்நாட்டுப் போர் நிலவும் மியன்மாருக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவது ஆபத்தானது என ஐநா எச்சரித்துள்ளது. திருப்பி அனுப்பும் நடவடிக்கையை நிறுத்தி ஐநாவுடன் இணைந்து செயல்படுமாறு ஐநா சிறப்பு அதிகாரி கெல்லி ஈ. கர்ரி மலேசியாவை வலியுறுத்தியுள்ளார்.
மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்பட்ட 1,476 பேர் யங்கூன் சென்றடைவர்
Source: Tamil Murasu