2019 மார்ச் 27 அன்று மிஷன் சக்தியின் கீழ் இந்தியா நடத்திய செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை அமெரிக்க உளவுத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அந்நாட்டின் முன்னாள் விமானப்படை உளவு அதிகாரி டேவிட் க்ரஷ் தெரிவித்துள்ளார். சோதனை குறித்து முன்னறிவிப்பு இருந்தும் அது செயற்கைக்கோளை இலக்காகக் கொண்டது தெரியவில்லை எனக் கூறிய அவர், விண்வெளிக் குப்பைகள் குறித்து ஆய்வாளர்கள் உடனடியாக ஆய்வு நடத்தியதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்குப் பின் இந்தியா நான்காவது நாடாக இணைந்தது.
மிஷன் சக்தி சோதனை அமெரிக்க உளவுத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக முன்னாள் அதிகாரி தகவல்
Source: Maalaimalar