எரிபொருள் போக்குவரத்துக் கட்டணம் 15% அதிகரிக்க இணக்கம்

எரிபொருள் போக்குவரத்துக் கட்டணம் 15% அதிகரிக்க இணக்கம்

எரிபொருள் போக்குவரத்துக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 20 சதவீத அதிகரிப்பு கோரப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்பு முறைமையை ஆய்வு செய்ய எதிர்வரும் 5ஆம் திகதி வரை கால அவகாசம் பெறப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் விநியோகப் பணிகளில் இருந்து விலகுவதாக வாகன உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Source: IBC Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies