குஜராத் பொது சிவில் சட்ட மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் சட்டத்தை அமல்படுத்த வழி ஏற்பட்டுள்ளதாக குஜராத் அரசு அரசிதழ் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் இச்சட்டம் குஜராத் முழுவதற்கும், வெளியில் வசிக்கும் குஜராத்திகளுக்கும் பொருந்தும். பழங்குடியினருக்கும், பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட்டவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது.
குஜராத் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
Source: NewsBytes Tamil