துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளை துபாய் விமானத்தில், ஓமன் துணை விமானி கோடரியால் இந்திய கேப்டனை தாக்கி விமானத்தை கட்டுப்படுத்த முயன்ற சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என ஐக்கிய அரபு அமீரகம் உறுதி செய்துள்ளது. காயமடைந்த கேப்டன் சவூதி அரேபியாவின் தபூக்கில் தரையிறக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். துணை விமானி கைது செய்யப்பட்டு, சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என சிறப்பு விசாரணைக் குழு ஆராய்ந்து வருகிறது.
ஃப்ளை துபாய் விமானத்தில் கோடரி தாக்குதல்: பயங்கரவாதம் என உறுதி
Source: Maalaimalar