புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்க, இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களை 27-லிருந்து 43 நாடுகளாக உயர்த்தியுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா இதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். ஒரே நாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதே இந்த வியூகத்தின் நோக்கம். உள்நாட்டு ஆற்றல் தேவையில் 90 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதி: 27-லிருந்து 43 நாடுகளாக விரிவாக்கம்
Source: Maalaimalar