மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் 1,500 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதி சேனைப் பயிர்ச்செய்கைக்காக ஆக்கிரமிக்கப்பட்டு, கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். நிரந்தரமான நியாயமான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மயிலத்தமடு பண்ணையாளர்கள் 1,500 நாட்களாக போராட்டம்
Source: IBC Tamil