மாதம் 25,000 முதல் 30,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்களும் 50-30-20 விதியைப் பின்பற்றி சேமிக்கலாம் என பட்டயக் கணக்காளர் நிஷாந்த் சங்கர் பரிந்துரைக்கிறார். இந்த விதியின்படி, வருமானத்தில் 50% அத்தியாவசியச் செலவுகளுக்கும், 30% ஆடம்பரச் செலவுகளுக்கும், 20% சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், அத்தியாவசியச் செலவுகள் அதிகமாக இருந்தால் 60-25-15 அல்லது 70-20-10 என மாற்றிக்கொள்ளலாம். சம்பளம் வந்தவுடன் 2,000-3,000 ரூபாயை அவசரகால நிதிக்கு ஒதுக்குவது நிதி ஒழுக்கத்தை வளர்க்கும்.
50-30-20 விதி: குறைந்த சம்பளத்திலும் சேமிக்க உதவும் பட்ஜெட் ட்ரிக்
Source: The Economic Times Tamil