மலேசியாவில் செப்டம்பர் 30 நிலவரப்படி 40.77 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; அவற்றில் 65.3% (26.6 மில்லியன்) மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாக போக்குவரத்து அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதில் 16 மில்லியன் கார்கள், 9.57 மில்லியன் மோட்டார்சைக்கிள்கள் அடங்கும். தனியார் வாகனச் சார்பு அதிகரித்து வருவதாகவும், இது நெரிசல், விபத்துகள், காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் எனவும் அமைச்சு எச்சரித்துள்ளது.
மலேசியாவில் பதிவான வாகனங்களில் 65% மட்டுமே பயன்பாட்டில்
Source: Tamil Murasu