தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தமிழ்நாடு அரசு முக்கிய நிபந்தனையை தளர்த்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு வேறு மாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள், பிரசவத்திற்காக சொந்த மாநிலத்திற்கு வந்து அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் கிடைக்கும். தாய்வழி தாத்தா, பாட்டி தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். காரைக்குடியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி வழக்கு இந்த தளர்வுக்கு காரணமாக அமைந்தது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு
Source: Zee Tamil News