டெல்லியின் ஷாஹ்தாரா மாவட்டம், புது சீமாபுரி ஈ-பிளாக்கில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்; எட்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய நான்கு மாத கர்ப்பிணி உள்ளிட்ட பலரை மீட்கும் பணி தொடர்கிறது. அருகிலுள்ள கட்டிடம் இடிக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
டெல்லி சீமாபுரியில் கட்டிடம் இடிந்து ஒருவர் பலி; பலர் சிக்கல்
Source: news18.com