மேற்கு வங்கம் சாந்தி நிகேதனில் உள்ள விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில், திருக்குறள் குறித்த இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. பல்கலைக்கழகத்தின் தமிழ் மற்றும் மராத்தித் துறைகள் இணைந்து நடத்தும் இந்நிகழ்வுக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆதரவளித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
சாந்தி நிகேதனில் திருக்குறள் கருத்தரங்கம் தொடங்கியது
Source: Hindu Tamil Thisai