தமிழக காவல்துறையை நவீனப்படுத்த ரூ.212.58 கோடி ஒதுக்கீடு செய்து உள்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறப்புக் காவல் படைக்கு ஸ்னைப்பர் துப்பாக்கிகள், அசால்ட் ரைபிள்கள், ட்ரோன்கள், 500 புதிய ரோந்து ஜீப்கள் உள்ளிட்டவை வாங்கப்படுகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் கண்காணிப்புக்கு ரூ.15.67 கோடியும், சைபர் குற்றப்பிரிவு நிலையங்களில் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்புக்கு ரூ.11.59 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறைக்கு ரூ.212 கோடி நவீன ஆயுதங்கள்
Source: Dinamani