இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தனஞ்செயா டி சில்வா உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்ததாக தேர்வுக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும் சாதாரண வீரராக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். இவரது தலைமையில் இலங்கை 18 டெஸ்ட்களில் 7 வெற்றி, 8 தோல்வி, 3 டிரா பெற்றது.
இலங்கை டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தனஞ்செயா டி சில்வா விலகல்
Source: myKhel tamil