ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்று ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விழாவில் விளையாட்டுத் துறைக்கு ரூ.1,000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், 8 வயதிலிருந்தே திறமையாளர்களை அடையாளம் காணும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். ஒலிம்பிக் பதக்கத்தை இலக்காகக் கொண்ட Dream Olympics 2036 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு பாராட்டு விழா: Dream Olympics 2036 திட்டம் அறிமுகம்
Source: Polimer News