இந்தியாவில் நடைபெறும் 2026 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகியுள்ளது; அதற்கு பதிலாக வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை பஞ்சாபின் ஜலந்தர் மற்றும் மொஹாலியில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 27 அன்று இந்தியா-வங்கதேசம் இடையே தொடர் தொடங்குகிறது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் விலகல்; வங்கதேசம் மாற்று
Source: news18.com