செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இந்தியா அனுமதி மறுப்பதாக எலான் மஸ்க் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், டில்லியில் நடந்த மொபைல் காங்கிரஸ் 2026 மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், ஸ்டார்லிங்க் உட்பட மூன்று நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்பே சேவையை தொடங்க முடியும் என்றும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பில் எந்த வகையிலும் சமரசம் செய்ய முடியாது என அவர் உறுதி அளித்தார்.
ஸ்டார்லிங்க் விவகாரம்: தேசிய பாதுகாப்பில் சமரசம் இல்லை என ஜோதிராதித்ய சிந்தியா உறுதி
Source: Dinamalar