தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும் தன்னார்வலர்கள் போராட்டத்தைத் தொடர்வார்கள் என CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார். 35,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் CAPF வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தர் பகுதியில் ஏழு அடுக்கு தடுப்புகள், 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் CJP போராட்டம்: 35,000 காவலர்கள் பாதுகாப்பு
Source: Zee Tamil News