ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்திற்கு உதவியதாக மும்பையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் மற்றும் ஐந்து இந்தியர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. எஸ்.எஸ்.பி.எல் சொல்யூஷன்ஸ் மற்றும் சமுத்ரா மெரைன் சர்வீசஸ் நிறுவனங்களும், த்வனி வோரா, நிசர்க் வோரா, கேத்தன் கொச்சிகர், பூபேந்திரசிங் சாகு, ஹரிஷ்யாம் ஹரிஹரன் சூண்டாகட்டில் ஆகியோரும் தடைப்பட்டவர்களில் அடங்குவர். ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வருவாயைத் தடுக்கும் 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் எண்ணெய் வர்த்தகம்: மும்பை நிறுவனங்கள், 5 இந்தியர்களுக்கு அமெரிக்க தடை
Source: IBC Tamil