தீபாவளியை முன்னிட்டு சிண்டாவின் ‘புரொஜெக்ட் கிவ் ஹார்ட்லேண்ட்ஸ்’ திட்டத்தின்கீழ் எட்டுக் குடியிருப்புப் பேட்டைகளில் $460,000க்குமேல் மதிப்புள்ள 2,350 அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன. பொங்கோல் 21 சமூக மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஐந்தாண்டுகளாக நடைபெறும் இத்திட்டம், உதவி நாடி லிட்டில் இந்தியா செல்லும் தேவையைக் குறைக்கிறது.
பொங்கோலில் சிண்டா தீபாவளி அன்பளிப்புப் பைகள் வழங்கல்
Source: Tamil Murasu