இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், எஸ்.பி. வேலுமணி இல்லத்தில் சி.வி. சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படும் இந்த அணி, செயற்குழு கூட்டத்திற்கு முன்பே தங்கள் நிலைப்பாட்டை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கட்சியில் மீண்டும் பெரும் அரசியல் பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் அதிருப்தி: வேலுமணி வீட்டில் தொடர் ஆலோசனை
Source: OneIndia Tamil