தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் 'இந்தியா' கூட்டணி பேரணி நடைபெற்றது. மண்டி ஹவுஸ் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்கள் இந்திய கேட் நோக்கிச் சென்றனர். உச்ச நீதிமன்றத்தை அடைய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலத்த பாதுகாப்பையும் மீறி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்ச நீதிமன்ற 'கேட் பி' நுழைவாயிலை அடைந்தனர்.
டெல்லியில் 'இந்தியா' கூட்டணி பேரணி: காவல்துறை தடுப்பு
Source: BBC Tamil