தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த கூட்டு மனுவில் 14 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றக் கட்டணத்தில் ரூ.220 பற்றாக்குறை, 9 மனுதாரர்களின் அங்கீகாரம் விடுபட்டது உள்ளிட்ட குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராகுல் மனுவில் 14 குறைபாடுகள்: உச்ச நீதிமன்றம்
Source: OneIndia Tamil