தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, டெல்லியில் உச்ச நீதிமன்றம் நோக்கி இண்டியா கூட்டணி நடத்திய பேரணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ்ஐஆர் மற்றும் வாக்குச்சீட்டு முறை கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டணி தலைவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. போலீஸார் தடுப்புகளை அமைத்ததால் பேரணி பாதியில் நிறுத்தப்பட்டது.
எஸ்ஐஆர் எதிர்ப்பு: டெல்லியில் உச்ச நீதிமன்றம் நோக்கி இண்டியா கூட்டணி பேரணி
Source: Zee Tamil News