வாக்காளர் பெயர் நீக்கம் மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை தேநீர் விருந்து அளிக்கிறார். இதற்கு முன் இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. தில்லியில் நடந்த ஜனநாயக பேரணியைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சி எதிர்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
வாக்காளர் பட்டியல் விவகாரம்: ராகுல் காந்தி தேநீர் விருந்து
Source: news18.com