ஹவாய் தீவில் உள்ள கிலாயூயா எரிமலை கடந்த ஓராண்டில் 50 முறைக்கும் மேல் வெடித்துள்ளது. 'சயின்ஸ்' இதழில் வெளியான ஆய்வின்படி, மேக்மாவில் அழுத்தம் குறையும்போது வாயுக்கள் விரிவடைந்து எரிமலைக் குழம்பு ஊற்றெடுக்கிறது. வெடிப்புக்கு முன் தரை உயர்வு மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதால், முன்கூட்டியே கணிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கிலாயூயா எரிமலை ஆண்டில் 50 முறை வெடிப்பு: புதிய ஆய்வு வெளியீடு
Source: sathiyam.tv