தமிழகத்தில் அதிகரித்த மின்தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் திறந்த சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ₹35 முதல் ₹37 வரை விலைக்கு வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக வரலாற்றில் மிக அதிக விலையிலான கொள்முதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தவெக செய்தித் தொடர்பாளர் அனந்தஜித் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிய பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. காற்றாலை உற்பத்தி சரிவு மற்றும் அவசர தேவைகளே காரணம் என அரசு விளக்கமளித்துள்ளது.
மின்சார கொள்முதல் சர்ச்சை: தவெக பதிவு நீக்கம்
Source: Zee Tamil News