மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா அக். 11-ஆம் தேதி தொடங்கி அக். 20-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நேற்று அன்னை மீனாட்சி அர்த்தநாரீசுவரர் திருக்கோலத்தில் காட்சியளித்தார். முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் காலை 9 முதல் பகல் 1 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையிலும் ஆன்மிகச் சொற்பொழிவுகள், இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்
Source: OneIndia Tamil