சர்க்கரை பேர ஊழல் விசாரணையில் நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா முன் திரைப்பட விநியோகத் தொழிலாளர் ஈரோடு என். சொக்கலிங்கம் பிள்ளை சாட்சியம் அளித்தார். 1971-ஆம் ஆண்டில் இரண்டு கைப் பெட்டிகளில் ரூபாய் நோட்டுகளை சென்னைக்குக் கொண்டு வந்து முன்னாள் முதல் அமைச்சரின் உதவியாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுத்ததாகத் தெரிவித்தார். கோத்தாரி சர்க்கரை ஆலையின் லால்குடி கிளை மேலாளர் டி.எல். ராகவனும் தொடர்ந்து சாட்சியம் அளித்தார்.
சர்க்காரியா கமிஷன் முன் சினிமா விநியோகஸ்தர் சாட்சியம்
Source: Dinamani