தீபாவளிக்கு மறுநாள் காற்றில் கலந்த பட்டாசுப் புகையால் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பு, சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது பொதுவானது. பட்டாசுகள் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்துமா, ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். வெளியில் செல்வதைத் தவிர்த்து, N95 முகக்கவசம் அணிந்து, கண்களைக் கழுவி, உப்பு நீரில் கொப்பளித்து, ஆவி பிடிப்பது பாதுகாப்பான வழிகளாகும்.
தீபாவளி புகை பாதிப்பிலிருந்து தப்பிக்க 5 வழிகள்
Source: Kalki Online