விழுப்புரத்தைச் சேர்ந்த சந்தோஷ், தனது முன்னாள் காதலி குறித்து 1,886 கேள்விகளுடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 97 மனுக்களை கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளார். பொதுநலனற்ற இச்செயல் சட்டத்தின் நோக்கத்தை சிதைப்பதாக மாநில தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்து, தகவல்களை வழங்க மறுத்து, ஓராண்டு தடை விதித்து, மனநல ஆலோசனை பெற உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் காதலி குறித்து 97 மனுக்கள்: ஆணையம் கண்டனம்
Source: malaimurasu.com