சையத் முஸ்தாக் அலி டி20 கோப்பையின் முதல் இரண்டு சுற்றுகளுக்கு பீகார் அணியின் கேப்டனாக இளம் வீரர் வைபவ் சூர்யவம்சி நியமிக்கப்பட்டுள்ளார். சூரஜ் காஷ்யப் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக பீகார் கிரிக்கெட் சங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. நவம்பர் 14 அன்று இந்தூரில் சௌராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்துடன் பீகார் தொடங்குகிறது. இது அவருக்கு கேப்டனாக வளர வாய்ப்பளிக்கும் என சங்கத் தலைவர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
சையத் முஸ்தாக் அலி கோப்பையில் பீகாருக்கு வைபவ் சூர்யவம்சி கேப்டன்
Source: news18.com