குஜராத் மாநிலம் சூரத்தின் மோட்டா வரச்சா பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ராம்ஸ்வரூப் முண்டே, தனது 20 ஊழியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் இனிப்புகளை தீபாவளி போனஸாக வழங்கியுள்ளார். எதிர்பாராத இந்த தொகையைப் பெற்ற ஊழியர்கள் கண்கலங்கி நன்றி தெரிவித்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஊழியர்களை குடும்ப உறுப்பினர்களாகக் கருதுவதாக உரிமையாளர் தெரிவித்தார்.
சூரத் ஜவுளிக்கடை உரிமையாளர் 20 ஊழியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் தீபாவளி போனஸ்
Source: OneIndia Tamil