தீபாவளி நாளான இன்று சென்னையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வட மற்றும் மத்திய சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த மழை தமிழகப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. காலை 7 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 72 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் ஒரு மேகக்கூட்டம் நகர்வதால் கூடுதல் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளியன்று சென்னையில் கனமழை: வட, மத்திய பகுதிகளில் தீவிரம்
Source: OneIndia Tamil