மத்திய ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 22 பேர் காயமடைந்தனர். ஷிஸுவோகா மாகாணத்தில் 40 கிமீ ஆழத்தில் மையம் கொண்ட இந்நிலநடுக்கம் ஐச்சி, ஹமாமட்சு, கியோட்டோ, நாரா உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன; ஷிங்கான்சென் ரயில்கள் முன்னெச்சரிக்கையாக குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.
மத்திய ஜப்பானில் 5.7 அளவு நிலநடுக்கம்; 22 பேர் காயம்
Source: news18.com