அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரிலே மூரின் கருத்துக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், FCRA சட்டத் திருத்தம் இந்தியாவின் உள் விவகாரம் என்றும், அதுகுறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் வெளிநாட்டு நிதியை ஒழுங்குபடுத்துவதாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சுட்டிக்காட்டினார். மசோதா நிறைவேறினால் இருநாட்டு உறவுகளில் தாக்கம் ஏற்படும் என மூர் எச்சரித்துள்ளார்.
FCRA சட்டத் திருத்தம் உள் விவகாரம்: அமெரிக்க எம்.பி.க்கு இந்தியா பதில்
Source: news18.com