சென்னை கோயம்பேட்டில் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் 9-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாணவர் அணி சார்பில் கலந்து கொண்ட செயலாளர் வீரமணி, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்தாலும், நீட் எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி போராட்டம்
Source: Kalaignar Seithigal