யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்லுபடியாகும் அனுமதியின்றி இயங்கும் 10 தனியார் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, காவல்துறையுடன் இணைந்து சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை மேற்கொள்ளும். பதிவின்றி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் விமலேஸ்வரன் தெரிவித்தார்.
யாழில் சட்டவிரோத தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
Source: IBC Tamil