வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல், சிபிஎல் தொடரில் பார்படாஸ் டிரைடெண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 9 சிக்ஸர்கள் அடித்து, டி20 வரலாற்றில் 800 சிக்ஸர்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனை படைத்தார். கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட் ஆகியோர் மட்டுமே இதற்கு முன் இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர். மேலும், சிபிஎல் தொடரில் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
டி20 கிரிக்கெட்டில் 800 சிக்ஸர்கள்: ஆண்ட்ரே ரசல் சாதனை
Source: myKhel tamil