இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 1,605 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன; அவற்றில் 1,693 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர இதனைத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் 555 பாதசாரிகள், 603 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அடங்குவர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துக்கள் சற்றே குறைந்துள்ளன.
இலங்கையில் வீதி விபத்துக்களில் 1,693 பேர் உயிரிழப்பு
Source: IBC Tamil