ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில், 20 ஆண்டுகளாக திருமணமான உமா தேவி, காதலன் சாரல சுப்ரமண்யத்துடன் சேர்ந்து கணவர் மங்கினேனி வெங்கட சுப்ரமண்யத்தை கொலை செய்து, அதை விபத்தாக நடித்துள்ளார். தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து, இரும்பு கம்பி மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் உடலை தேசிய நெடுஞ்சாலையில் வீசியுள்ளனர். கணவரின் தந்தை புகார் அளித்ததால் விசாரணை நடத்தி, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
திருமணமான 20 ஆண்டுகளில் கணவனை கொன்ற மனைவி
Source: news18.com