சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை
Source: News18 Tamil