கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கி.புஷ்பவல்லி (73), கடந்த 14 ஆண்டுகளாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறார். சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கிய அவர், இதுவரை 12 ஆயிரம் துணிப்பைகளை இலவசமாக விநியோகித்துள்ளார். ஓய்வூதியத் தொகையில் தானே பைகளை தைத்து வழங்குவதாக தெரிவித்தார்.
கோவை மூதாட்டி 14 ஆண்டுகளாக இலவச துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு
Source: Hindu Tamil Thisai